தீவன இயந்திரத்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு: கோழிப்பண்ணையில் பயங்கரம்

தீவன இயந்திரத்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு: கோழிப்பண்ணையில் பயங்கரம்

கோழிகளுக்கு தீவனம் போடும் இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதில் ஆறு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த தோளுரில் ஏராளமான  தனியார் கோழி பண்ணைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் ஒரு பண்ணையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று  மாலையில் கோழிகளுக்கு தீவனம் போடும் பணியில்  பிஹாரைச் சேர்ந்த சர்மிந்தர்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார்.  அவரது மகள் நிவாக்குமாரி (6) என்ற சிறுமி அங்கு  விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிவாகுமாரியின் தலைமுடி தீவனம் தள்ளிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கியது. இதநால் அவர் இயந்திரத்தின் பெல்ட்டால் இழுக்கப்பட்டு படுகாயமடைந்தார். அதைப் பார்த்த அவரது தந்தையின் அலறல் சத்தம்  கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை  மீட்டனர்.  ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில்  சிறுமி  இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக மோகனூர்  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in