9 சிக்சர், 19 பவுண்டரி: இரட்டை சதம் விளாசினார் இந்திய வீரர் ஷுப்மன் கில்

9 சிக்சர், 19 பவுண்டரி: இரட்டை சதம் விளாசினார் இந்திய வீரர் ஷுப்மன் கில்

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசியது.

தொடக்க வீரராக ரோகித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் களம் இறங்கினர். இந்த ஜோடி 60 ரன்னுக்குள் பிரிந்தது. ரோகித் சர்மா 38 ரன்னில் வெளியேறியதும் விராட் கோலி களமிறங்கினார். இவர் சிறிது நேரம் கூட நிலைத்து நிற்கவில்லை. இவர் 8 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த இஷான் கிஷன் 5 ரன்னிலும், சூரியகுமார் 31 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 28 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதே நேரத்தில் தொடக்க வீரர் ஷுப்மன் கில் அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை விளாசினார். 149 பந்தில் 208 ரன்கள் குவித்த கில், 19 பவுண்டரி, 6 சிக்சர்கள் விளாசினார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஷுப்மன் கில் அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும். மேலும் இந்தியாவைச் சேர்ந்த 5-வது வீரர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார். சச்சின், சேவாக், ரோகித் சர்மா, இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்களை தொடர்ந்து கில் இரட்டை சதம் அடித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in