ஏ.சி கோச்சில் இடம் தருவதாக ஆசைகாட்டிய டிடிஇ: ஓடும் ரயிலில் ஜெர்மன் பெண்ணுக்கு நடந்த கொடுமை

ஏ.சி கோச்சில் இடம் தருவதாக ஆசைகாட்டிய டிடிஇ: ஓடும் ரயிலில் ஜெர்மன் பெண்ணுக்கு நடந்த கொடுமை

சுற்றுலா வந்த ஜெர்மன் பெண்ணிடம் குளிர்சாதன பெட்டியில் இருக்கை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி ஓடும் ரயிலில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்த 25 வயது பெண், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்துள்ளார். கடந்த 13-ம் தேதி ரயில் மூலம் அங்கிருந்து அஜ்மீருக்கு சென்றார். அந்த பெண் சென்ற ரயிலில் விஷால் சிங் ஷெகாவத் என்பவர் டிக்கெட் பரிசோதகராக சென்றுள்ளார். அந்த இளம்பெண் பொது கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த விஷால் சிங் ஷெகாவத், அந்த பெண்ணுக்கு குளிர்சாதனப் பெட்டியில் இருக்கை ஒதுக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிச் சென்ற அந்த பெண்ணுக்கு ஓடும் ரயிலில் விஷால் சிங் ஷெகாவத் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ரயில்வே போலீஸாரிடம் அந்த பெண் புகார் அளித்தார். இந்த புகாரை ஜெய்ப்பூர் ஜிஆர்பிக்கு அனுப்பி வைத்து. இதையடுத்து விஷால் சிங் ஷெகாவத் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில்," ரயிலில் டிச.13-ம் தேதி பயணம் செய்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் , ரயிலில் நடந்த சம்பவம் குறித்து டிச.16-ம் தேதி புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் சிங் ஷெகாவத் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர் விசாரணைக்குப் பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் " என்று கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in