அடங்காத குடிமகன்கள்: அபராதத்தை அள்ளிக் குவிக்கும் போலீஸார்!

போலீஸ் சோதனை
போலீஸ் சோதனைஅடங்காத குடிமகன்கள்: அபராதத்தை அள்ளிக் குவிக்கும் போலீஸார்!

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 8,786 தீர்வுக் காணப்பட்டு இணையதளம் வாயிலாக மட்டும் ரூ.41,94,500 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே குடித்துவிட்டு வாகனம் ஓட்டு விபத்து ஏற்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து போலீஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 162 இடங்களில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அதில், 8,786 நபர்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இணையதளம் மூலமாக ரூ.41,94,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த நான்கு மாதங்களில் நிலுவையில் இருந்த 1,41,886 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ. 5,84,47,860 வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது ஒரு துன்புறுத்தல் என்று கருதாமல் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற வேண்டுமென சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in