குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் தன்பாலின உறவாளர்கள் திருமணம்: கொல்கத்தாவில் வினோதம்!

குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் தன்பாலின உறவாளர்கள் திருமணம்: கொல்கத்தாவில் வினோதம்!

கொல்கத்தாவில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தன்பாலின உறவாளர்களான இரண்டு ஆண்கள் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தன்பாலின உறவாளர்களான அபிஷேக் ரே மற்றும் சைதன்யா ஷர்மா ஆகிய இரண்டு ஆண்களும் கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தடபுடலாக இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் சாதாரணமாக திருமணத்திற்குரிய அனைத்து சடங்குகளையும் கடைபிடித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களின் ஹல்டி மற்றும் திருமண விழாக்களின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் அதிகளவில் பகிரப்பட்டுள்ளன. இந்த திருமண நிகழ்வில் அபிஷேக் ஒரு பாரம்பரிய பெங்காலி மாப்பிள்ளை போல் வேட்டி மற்றும் குர்தாவில் உடுத்திக்கொள்ள, சைதன்யா ஷெர்வானி உடையை அணிந்திருந்தார். இந்த திருமணத்தின் பல புகைப்படங்களை சைதன்யா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பகிர்ந்துள்ளார்.

அபிஷேக் ரே ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சைதன்யா சர்மா டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பணிபுரிகிறார். ஒன்றாக பணிபுரிந்தபோது இவர்கள் இருவரும் காதலித்ததாக தெரிவித்துள்ளனர். திருமணம் கைகூடிய மகிழ்ச்சியில் பேசிய அபிஷேக், "இறுதியில் காதல் அனைத்தையும் வெல்கிறது, அதற்கு சாதி, மதம், மதம் மற்றும் மிக முக்கியமாக பாலினம் தடை இல்லை" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in