இந்தியாவில் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில் கவுதம் அதானி முதலிடம்: பின்னுக்கு தள்ளப்பட்ட முகேஷ் அம்பானி!

இந்தியாவில் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில் கவுதம் அதானி முதலிடம்: பின்னுக்கு தள்ளப்பட்ட முகேஷ் அம்பானி!

இந்தியாவின் 100 பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.

அண்மையில், ப்ளூம்பெர்க் நிறுவனம் உலக பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் முதலிடத்தை பிடித்தார். இவரது சொத்து மதிப்பு 251 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. 2-வது இடத்தில் உள்ள அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெசோஸ் இருக்கிறார். சொத்து மதிப்பு 153 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 3-வது இடத்தை இந்திய கோட்டீஸ்வரர் கவுதம் அதானி பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 137 புள்ளி 4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்திருந்தது.

இந்நிலையில், போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் 100 கோடீஸ்வர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி கவுதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார். 2022-ம் ஆண்டுக்கான கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த முகேஷ் அம்பானியை 2-ம் இடத்திற்கு தள்ளி கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 88 பில்லியன் டாலராக இருக்கிறது. முதல் 10 இடங்களில் ராதாகிஷன் தமானி, சைரஸ் பூனவல்லா, சிவ் நாடார், சாவித்ரி ஜிண்டால், தீலீப் ஷாங்வி, ஹிந்துஜா சகோதரர்கள், குமார் மங்கலம் பிர்லா மற்றும் பஜாஜ் குடும்பம் இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in