உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 25ம் இடத்துக்கும் கீழே தள்ளப்பட்டார் கௌதம் அதானி!

கௌதம் அதானி
கௌதம் அதானிஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் 25ம் இடத்துக்கும் கீழே தள்ளப்பட்டார் கௌதம் அதானி!

ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த கௌதம் அதானி, இப்போது உலகின் 25 பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. ஃபோர்ப்ஸ் மற்றும் ப்ளூம்பெர்க்கின் உலக பில்லியனர்கள் பட்டியலின்படி, அவர் முறையே 26 மற்றும் 29 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்

தொழிலதிபர் கௌதம் அதானியின் வீழ்ச்சி எப்போது முடிவடையும் என்று தெரியவில்லை. கடந்த ஆண்டு உலகின் 2வது பணக்காரராக உயர்ந்த அவர், ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் பேரிடியை சந்தித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாகவே அவரின் சொத்து மதிப்பு மளமளவென சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அதானியின் நிகர சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலராக இருந்ததால், அவர் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 26 இடத்துக்கும், ப்ளூம்பெர்க்கின் உலக பில்லியனர்கள் பட்டியலில் 29 வது இடத்திற்கும் சரிந்துள்ளார்.

அமெரிக்க ஷார்ட் சேல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடப்பட்டதில் இருந்து, அவரின் சொத்துமதிப்பு $75 பில்லியனுக்கும் அதிகமாக குறைந்துள்ளது. திங்களன்று, அதானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் முதன்முறையாக $50 பில்லியனுக்கும் குறைவாக வந்தது.

உலகப்பணக்காரர்கள் பட்டியலில் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்திலும், ட்விட்டர் தலைவர் எலோன் மஸ்க் அடுத்த இடத்திலும் உள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகின் மூன்றாவது பணக்காரர் மற்றும் ஆசியாவின் முதல் பணக்காரராக இருந்த அதானி, இப்போது ஆசியாவின் நான்காவது பணக்காராக உள்ளார். இப்பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடத்திலும், சீன இரட்டையர்களான ஜாங் ஷான்ஷான் மற்றும் ஜாங் யிமிங் ஆகியோர் 2,3ம் இடங்களிலும் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in