வாலாஜாபாத்தில் வெடித்து சிதறிய காஸ் குடோன்; ஒருவர் பலி: உயிருக்குப் போராடும் 6 பேர்!

வாலாஜாபாத்தில் வெடித்து சிதறிய காஸ் குடோன்; ஒருவர் பலி: உயிருக்குப் போராடும் 6 பேர்!

காஞ்சிபுரம் அருகே குடோனில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 12 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா தேவரியம்பாக்கத்தை சேர்ந்தவர் அஜய்குமார். அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக ஏஎன்எஸ் என்ற பெயரில் சிலிண்டர் குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த குடோனை அவரது தம்பி ஜீவானந்தம் நிர்வகித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த குடோனில் இருந்து ஒரகடம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வணிக ரீதியான சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டு அருகே இருந்த சிலிண்டர் குடோனில் திடீரென காஸ் கசிந்து தீவிபத்து ஏற்பட்டது. அப்போது குடோனில் இருந்த சிலிண்டர் அடுத்தது பலத்த சத்தத்துடன் வெடித்து சிறியதில் ஊழியர்கள், வீட்டருகே இருந்த பொதுமக்கள், சிறார்கள், உட்பட 12 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் மறைமலைநகர், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து விரைந்து வந்த போலீஸார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும் தீவிபத்தில் படுகாயமடைந்த ஜீவானந்தம், பூஜா, சந்தியா, நிவேதா, கோகுல் மற்றும் 2 லாரி ஓட்டுநர்கள் உட்பட 12 பேரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிலிண்டர் வெடிவிபத்தில் சிக்கிய 12 பேரில் காஞ்சிபுரத்தை சேர்ந்த நிவேதா (21), தமிழசன்(10), சக்திவேல்(32), கிஷோர் (13), கோகுல் (22), சண்முப்பிரியன் (17) மற்றும் கடலூரை சேர்ந்த ஆமோத்குமார் (22) ஆகிய 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் அவர்கள் நேற்று இரவு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரை சேர்ந்த ஆமோத்குமார் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 6 பேரின் நிலைமை மோசமான நிலையில் உள்ளதால் அவர்களுக்கு மருத்துவர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in