சொகுசு காரில் சிக்கிய கஞ்சா மூட்டைகள்: 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது

சொகுசு காரில் சிக்கிய கஞ்சா மூட்டைகள்: 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது

திண்டுக்கல் அருகே சொகுசு காரில் கஞ்சா மூட்டைகளுடன் சுற்றித் திரிந்த 3 பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு படி மாநிலம் முழுவது போதைப் பொருட்கள் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கல் அதிகமுள்ளதாக திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரனுக்கு தகவல் கிடைத்தது. அவரது அறிவுறுத்தல் படி, பட்டிவீரன்பட்டி பகுதியில் தனிப்படையினர் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சுற்றி திரிந்த சொகுசு காரை சோதனை செய்தனர். அதில் 3 மூட்டைகளில் தலா 20 கிலோ வீதம் 60 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக பட்டிவீரன்பட்டி சக்திவேல் (27), நிலக்கோட்டை சக்சேனா ஸ்ரீ பால் சேத்னா (25), சோழவந்தான் தனலட்சுமி (50), ராஜாத்தி (58), நாகபாண்டி (30), ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 கிலோ கஞ்சா, சொகுசு கார், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து பட்டிவீரன்பட்டி போலீஸில் ஒப்படைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in