வீட்டில் பண்டல், பண்டலாக கஞ்சா பதுக்கல்: தாத்தா, பேத்தி, மகன் கைது

வீட்டில் பண்டல், பண்டலாக கஞ்சா பதுக்கல்: தாத்தா, பேத்தி, மகன் கைது

திண்டுக்கல் அருகே விற்பனைக்காக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தொடர்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்படி, மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திண்டுக்கல் அருகே நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி, தாடிக்கொம்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அங்கு பதுக்கி வைத்திருந்த கஞ்சா பண்டல்களைக் கைப்பற்றினர்.

இது தொடர்பாக பழனியப்பன் (58), இவரது மகன் செந்தில் (37), இவரது பேத்தி நாகலட்சுமி (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து தலா 2 கிலோ வீதம் 8 பண்டல் கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in