தேனி அருகே கஞ்சா, குட்கா பண்டல் பறிமுதல்: பெண் உள்பட 4 பேரை கைது செய்தது போலீஸ்

கஞ்சா, குட்கா பண்டல் பறிமுதல்
கஞ்சா, குட்கா பண்டல் பறிமுதல்பெண் உள்பட 4 பேர் கைது

தேனி அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கஞ்சா, குட்கா பண்டல்களை பறிமுதல் செய்த போலீஸார் பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், புகையிலை பொருட்கள் பயன்பாடு ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி டிஜிபி சைலேந்திர பாபு, அறிவுறுத்தல் படி மாநிலம் முழுவதும் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க போலீஸ் உயரதிகாரிகள் தலைமையில் தனிப்படையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதன் தொடர் நடவடிக்கையாக செக்போஸ்ட்களில் மேற்கொள்ளப்படும் வாகன சோதனை மூலம் டன் கணக்கில் கடத்தப்படும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில், போலீஸாரின் வாகன சோதனையில், கடத்திச் சென்ற தலா 2 கிலோ வீதம் 3 பெட்டிகளில் இருந்த 60 கிலோ கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். இதே போல், ஓடைப்பட்டி பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 130 கிலோ குட்கா மூடைகளை பறிமுதல் செய்தனர். இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக கம்பத்தைச் சேர்ந்த கன்னிகா (42), அஜித்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர்.

ஓடைப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in