ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா டெலிவரி: பையை திறந்து பார்த்து போலீஸ் அதிர்ச்சி

கஞ்சாவை டெலிவரி செய்து கைதான தமிழ்ச்செல்வம்
கஞ்சாவை டெலிவரி செய்து கைதான தமிழ்ச்செல்வம் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா டெலிவரி: பையை திறந்து பார்த்து போலீஸ் அதிர்ச்சி

சென்னையில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா டெலிவரி செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரவாயல் அடுத்த ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவர் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆன்லைனில் உணவு டெலிவரி மட்டுமின்றி, கஞ்சா போன்ற போதை பொருள்களையும் தமிழ்செல்வம் விற்பனை செய்து வந்துள்ளார். மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் பேரில், காவல்துறையினர் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், ஆலப்பாக்கம் பகுதியில் தனியார் உணவு டெலிவரி செய்யும் உடையுடன், சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது, உணவு டெலிவரி செய்யும் பையில் ஒரு கிலோ கஞ்சா வைத்திருப்பதைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருப்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணவு டெலிவரி செய்வது போல கஞ்சா டெலிவரி செய்து வந்த கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in