
கோவையில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த ஒடிசாவைச் சேர்ந்த தந்தை - மகன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கிலோ கணக்கில் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சூலூர் கண்ணம்பாளையம் பகுதிக்கு இன்று விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரதாப் சிங் என்பவரது மகனான மனோஜ் குமார் சிங்(32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6.5 கிலோ எடையுள்ள 32 கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.