புழல் சிறைக்குள் கஞ்சா, செல்போன் பதுக்கலா?: 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை

புழல் சிறைக்குள் கஞ்சா, செல்போன் பதுக்கலா?: 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை

சென்னை புழல் சிறைச்சாலைக்குள் கஞ்சா, செல்போன் பதுக்கி வைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட போலீஸார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழக சிறைகளில் அரசியல் தரப்பு மற்றும் முக்கிய கைதிகளுக்கு செல்போன் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக புகார் தொடர்கிறது. இது தொடர்பாக சென்னை புழல் மத்திய சிறை, மதுரை மத்திய சிறை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது. தற்போது சென்னை புழல் மத்தியச்சிறைக்குள் கஞ்சா, செல்போன் பதுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, புழல் சிறையில் காவல் துணை ஆணையர் ராஜாராம் தலைமையிலான ஐம்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சிறைவாசிகளிடம் கஞ்சா, சொல்போன் உள்ளதா என்பது குறித்து தீவிர சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

சிறை அறைகள், கழிப்பறை உள்பட அனைத்து பகுதிகளில் செல்போன்கள், கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் சோதனையிடப்பட்டு வருகிறது. காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெறுகிறது. அப்போது சிறை அதிகாரிகள், வார்டன்கள் சிறையில் இருந்து வெளியே செல்ல காவல் துறையினர் அனுமதிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in