பிளஸ் 2 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: பள்ளி முன்னாள் தாளாளர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் தாளாளர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் தாளாளர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! பிளஸ் 2 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: பள்ளி முன்னாள் தாளாளர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

பிளஸ் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பள்ளி தாளாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியின் தாளாளராக குதுப்புன் நஜிப்(47) என்பவர் இருந்தார். இவர் இப்பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்த இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாக புகார் எழுந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, அது குறித்து நடத்திய விசாரணையில் குதுப்புன் நஜீப் கைது செய்யப்பட்டார். நஜீப்க்கு ஆதரவாகச் செயல்பட்ட அவரது மனைவி முகைதீன் பாத்திமா, பள்ளியின் தலைமையாசிரியை காதர் அம்மாள்பீவி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

குதுப்புன் நஜீப் பாலியல் வழக்கில் சிக்கியதால் அவர் தாளாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் அண்மையில் ஜாமீனில் வந்திருந்த குதுப்புன் நஜீப் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு நேற்று இரவு உத்தரவு வந்தது. இதனைத் தொடர்ந்து குதுப்புன் நஜீப் மீண்டும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in