விதவைப் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: குண்டாஸை ரத்துக்கோரிய வாலிபர்களின் மனுக்கள் தள்ளுபடி

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் விதவைப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம்: குண்டாஸை ரத்துக்கோரிய வாலிபர்களின் மனுக்கள் தள்ளுபடி

விதவைப் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை குண்டர் சட்டத்தில் கீழ் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நாமக்கல்லை சேர்ந்த 31 வயது விதவைப் பெண், திருச்செங்கோட்டை சேர்ந்த தனது நண்பர் ஒருவருடன் கடந்த 2022 மே மாதம், நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஏரி பகுதியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு வந்த 4 பேர், அப்பெண்ணையும் அவரது நண்பரையும் மிரட்டி நகை, பணத்தை பறித்துள்ளனர். மேலும் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீஸார், நாமக்கல் வீசாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷ்குமார், பெயின்டர் முரளி மற்றும் வல்லரசு ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மூன்று பேரையும் பாலியல் குற்றவாளிகள் என அறிவித்து, குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர், 2022 ஜூன் மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்து அவர்களை விடுவிக்கக் கோரி, மூவரின் தாயாரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல் குமார் அமர்வு, மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in