காதலில் வீழ்த்திய வாலிபர்... தனி அறையில் சித்ரவதை: நண்பர்களால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை

காதலில் வீழ்த்திய வாலிபர்... தனி அறையில் சித்ரவதை: நண்பர்களால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை

இளம்பெண்ணை காதலில் விழவைத்து நண்பர்களுடன் சேர்ந்து வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் உபியில் நடந்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம், காலனிகஞ்ச் கிராமத்தை சேர்ந்தவர் பிரமிளா (பெயர் மாற்றம்). 23 வயதான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜாவித் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 14-ம் தேதி பிரமிளாவை மும்பைக்கு அழைத்துச் சென்ற ஜாவித், ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார். பின்னர், பிரமிளாவை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து திருமணம் செய்துள்ளார் ஜாவித். இதன் பின்னர், தனது காதல் மனைவியை தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 23-ம் தேதி காலனிகஞ்ச் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பிரமிளாவை இறங்கிவிட்ட ஜாவித், நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினார் கொன்று விடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றுவிட்டார். இதன் பின்னர் வீட்டிற்கு சென்ற பிரமிளா தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, பிரமிளாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஜாவித் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் மனைவியை தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் உபியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in