`அப்பா சிறையில் இருக்கிறார்; அம்மா ஜாமீனுக்கு அலைந்தார்'- நண்பர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட‌ மாணவி கண்ணீர்

`அப்பா சிறையில் இருக்கிறார்; அம்மா ஜாமீனுக்கு அலைந்தார்'- நண்பர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட‌ மாணவி கண்ணீர்

’’வேலியே பயிரை மேய்வது போல” தன் நண்பரின் மகளை கொடூரர்கள் சேர்ந்து பாலியல் வன்மத்திற்கு உள்ளாக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

கேரளத்தின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரின் தந்தை கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். தினமும் பள்ளிக்கூடம் வந்த அந்த மாணவி மிகவும் உடல் நலிவுற்றும், ஆழ்ந்த கவலையிலும் இருந்தார். தந்தை கைது செய்யப்பட்டதால் மாணவி சோகத்தில் இருப்பதாக முதலில் ஆசிரியர்கள் நினைத்தனர். தொடர்ந்து மாணவியின் முகத்தில் மாறாத சோகம் நிழலாடியது. இதனைத் தொடர்ந்து ஆசிரியைகள் சிலர் மாணவியைத் தனியாக அழைத்து இதுபற்றி விசாரித்தனர்.

அப்போது மாணவி, “அப்பா கைதாகி சிறையில் இருக்கிறார். அம்மா ஜாமீன் எடுக்க அலைந்து வருகிறார். அப்பாவின், நண்பர்கள் மூன்றுபேர் இதற்கு உதவுவதாக வீட்டுக்கு வந்தனர். அம்மா, அவர்களிடம் என்னைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு ஜாமீனுக்கு அலைவார். ஆனால் அந்த மூவரும் என்னை மிரட்டி பாலியல் வன்மம் செய்தனர். என்னையும், குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி பாலியல் வன்மத்திற்கு உள்ளாக்கினர்” என கண்ணீர் மல்க சொல்ல ஆசிரியர்களோ அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.

இவ்விவகாரம் குறித்து குழந்தைகள் நலக்குழுவுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த அவரது தந்தையின் நண்பர் ஷாஜியை(29) கைது செய்தனர். அவரோடு சேர்ந்து இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in