
சென்னை அத்திப்பட்டை சேர்ந்தவர் ஜெயராமன். பிரபல தொழிலதிபரான இவர், வீட்டின் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது அவரை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியுள்ளது. வெகு நேரமாக ஜெயராமனை காணாமல் அவரது மனைவி தேடியுள்ளார்.
சிறிது நேரத்தில் தொழிலதிபரின் மனைவிக்கு கால் செய்து 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் கணவனை விடுவிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த மனைவி, அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், பணம் கேட்டு மிரட்டல் விடுத்தவரின் அலைப்பேசி எண்ணின் நெட்வொர்க்கை கண்காணித்து ஜெயராமனை கடத்திய கும்பல் மயிலாப்பூரில் இருப்பதை கண்டுபிடித்தனர். கடத்தல் கும்பலிடம் இருந்து ஜெயராமனை போலீஸார் பத்திரமாக மீட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதேப் பகுதியை சேர்ந்த தேவராஜ், திவாகர், ஸ்டீபன்ராஜ், பாலாஜி, தினேஷ் உள்ளிட்ட 6 நபர்களை போலீஸார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் 3 மணி நேரத்தில் தொழிலதிபரை கண்டிபிடித்து பத்திரமாக மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினர்.