கண்ணாடியை உடைத்து லாரிக்குள் புகுந்த கும்பல்; 11 லட்சத்துடன் காரில் எஸ்கேப்: சினிமாவை விஞ்சும் நூதன கொள்ளை

கும்பல்
கும்பல்கண்ணாடியை உடைத்து லாரிக்குள் புகுந்த கும்பல்; 11 லட்சத்துடன் காரில் எஸ்கேப்: சினிமாவை விஞ்சும் நூதன கொள்ளை

லாரியைத் துரத்தி வந்த மர்மக் கும்பல் பக்கவாட்டுக் கண்ணாடியை உடைத்து லாரிக்குள் புகுந்து டிரைவரைக் கட்டுப்போட்டு, 11 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(54) லாரி டிரைவர். இவர் ஓசூரில் இருந்து காய்கறி லோடுகளை ஏற்றிக்கொண்டு நெல்லை சந்தைக்கு வந்து இறக்கினார். மீண்டும் தக்காளி லோடு எடுக்க ஓசூரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தார். இவரது லாரியில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஸ்குமார்(23) என்பவரும் உடன் இருந்தார். இவர்கள் லாரியில் அடுத்த தக்காளி லோடு வாங்குவதற்காக 11.50 லட்சம் பணமும் இருந்தது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது இவர்கள் லாரியை காரில் வந்த ஒரு கும்பல் மறித்தது. ஆனால் லாரியில் பணம் இருந்ததால் பாலகிருஷ்ணன் லாரியை நிறுத்தவில்லை. காரில் பின் தொடர்ந்து வந்த கும்பல் லாரியின் பக்கவாட்டுக் கண்ணாடியை உடைத்து லாரிக்குள் புகுந்தது. தொடர்ந்து டிரைவர் பாலகிருஷ்ணனையும், அவரோடு இருந்த சதீஸ்குமாரையும் கட்டிப் போட்டு லாரியையும் அந்த கும்பலே ஓட்டியது. ஒருகட்டத்தில் லாரியில் இருந்த 11.50 லட்சத்தையும் எடுத்துவிட்டு லாரியை நிறுத்திவிட்டு பின்னாலேயே வந்த தங்கள் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டனர். கையில் கட்டுடன் இருந்த இருவரையும் அப்பகுதிவாசியினர் மீட்டனர்.

தங்களைப் பின் தொடர்ந்து வந்த கார் எண்ணை பாலகிருஷ்ணனும், சதீஸ்குமாரும் குறித்து வைத்து இருந்தனர். இதுகுறித்து அவர்கள் கொடுத்தத் தகவலின்பேரில் தாடிக்கொம்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரைப்படப் பாணியில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in