விநாயகர் ஊர்வலம்; அக்.1 ம் தேதி வரை மதுபான கடைகளை மூட உத்தரவு!

விநாயகர் விசர்ஜனம்
விநாயகர் விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் படிப்படியாக நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்காக பெங்களூரு மாநகரில் பல பகுதிகளில் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூருவில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி, இன்று செப்டம்பர் 21ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை பெங்களூரு மாநகரில் பல்வேறு இடங்களில் மதுபானம் விற்கத் தடை விதித்து பெங்களூரு காவல்துறை ஆணையர் தயானந்தா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம் பார்கள், உணவகங்கள், ஒயின் ஷாப்கள், பப்கள் மற்றும் கர்நாடகத்தின் பிரத்யேக மைசூர் சேல்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்வது தடை செய்யப்படுகிறது.

மதுவிலக்கு அமல்
மதுவிலக்கு அமல்

மதுவிலக்கு அமல் விவரங்கள்: செப் 21, 22 - ஜே.சி.நகர், ஆர்.டி.நகர், ஹெப்பல், சஞ்சய்நகர் மற்றும் டி.ஜே.ஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகள்.

செப்.22,23 கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி, கோவிந்தபுரா, பானஸ்வாடி, ராமமூர்த்தி நகர், ஹென்னூர், கமர்ஷியல் தெரு, சிவாஜிநகர், பாரதிநகர், புலகேசி நகர், ஹலசூரு, கொத்தனூர், அம்ருதஹள்ளி, சம்பிகேஹள்ளி ஆகிய காவல் நிலைய எல்லைகள். செப்.23, 24 - ஜே.சி.நகர், ஆர்.டி.நகர், ஹெப்பாள், சஞ்சய்நகர், டி.ஜே.ஹள்ளி, பாரதிநகர் மற்றும் புலகேசி நகர்.

செப்.23 முதல் 25 வரை - வித்யாரண்யபுரா, யெலஹங்கா மற்றும் கொடிகேஹள்ளி காவல்நிலைய பகுதிகள். செப். 24, 25 பாரதிநகர், சிவாஜிநகர், புலகேசி நகர் மற்றும் ஹலசுரு காவல் நிலைய எல்லைகள். செப்.30 முதல் அக்1 வரை ஹைகிரவுண்ட் காவல் நிலைய எல்லை.

காவல்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவில் இந்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in