கோயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்: விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்!

கோயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்: விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையில் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று அதிகாலையில் மக்கள் புத்தாடை அணிந்து தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர். மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மூலவர், உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர். வேலூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நெல்லையில் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ள மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி விநாயகரை வழிபட்டனர். இதேபோல் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in