வெண்ணெய் உருண்டை கல் மீது திடீர் விளம்பரம்: காரணத்தைச் சொல்லும் தொல்லியல் துறை

வெண்ணெய் உருண்டை கல் மீது திடீர் விளம்பரம்: காரணத்தைச் சொல்லும் தொல்லியல் துறை

ஜி 20 மாநாட்டை விளம்பரப்படுத்தும் வகையில் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை கல் மீது லேசர் ஒளிக்கற்றை மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிக முக்கியமான பொருளாதார நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20 கூட்டமைப்பில், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு உறுப்பு நாடு தலைமைப் பொறுப்பை வகிக்கும். 2022-ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பு இந்தோனேஷியா வசம் இருந்தது. அந்நாட்டில் சமீபத்தில் நடந்துமுடிந்த ஜி20 மாநாட்டில், அந்தப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

அதன்படி 2023-ல் ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்த இருக்கிறது. இந்த மாநாட்டில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

ஜி20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் பல்வேறு மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தளங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாநாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்கள் நம் நாட்டின் கலை, கலாச்சாரம் பற்றித் தெரிந்து கொள்ளும் வகையில் நாடு முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உலக பாரம்பரிய புராதன சின்னங்கள் மூலம் விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி புராதன சின்னங்கள் ஜி20 லேசர் ஒளி வெளிச்சத்தில் மிளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை கல் மீது லேசர் ஒளிக்கற்றை மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in