இரவு உணவு பரிமாற மறுத்ததால் ஆத்திரம்: குழந்தைகள் கண் முன் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்

இரவு உணவு பரிமாற மறுத்ததால் ஆத்திரம்: குழந்தைகள் கண் முன் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்

இரவு நேர உணவைப் பணிமாற மறுத்த மனைவியை 2 குழந்தைகள் முன்பு அவரது கணவர் கோடாலியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவைச் சேர்ந்தவர் யோகேந்திர ஸ்ரீவாஸ்(38). இவர் கோர்பாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கம்பவுண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சிதா(32). இவர்களுக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

நேற்று இரவு பணி முடிந்த யோகேந்திர ஸ்ரீனிவாஸ், உணவு பரிமாறும்படி. அவரது மனைவி மஞ்சிதாவிடம் கூறினார். ஆனால், அவர் உணவு பரிமாற முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த யோகேந்திர ஸ்ரீவாஸ் கோடாலியால் தனது மனைவி மஞ்சிதாவை சரமாரியாக வெட்டினார். மஞ்சிதாவின் அலறல் சத்தம் கேட்டு அவர்களது இரண்டு குழந்தைகள் ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து மஞ்சிதாவின் மகன்கள், அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மஞ்சிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். யோகேந்திர ஸ்ரீவாஸை போலீஸார் இன்று கைது செய்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப சண்டை நடந்துள்ளது. இதனால் மனஉளைச்சலில் இருந்த யோகேந்திர ஸ்ரீவாஸ், கோடாலியால் அவரது மனைவியை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. குழந்தைகள் கண் முன்பு அவரது தாய் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ச த்தீஸ்கர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in