பிரதமர் மோடியின் படம் இல்லாவிட்டால் நிதியுதவி நிறுத்தப்படும்... மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் படம் இல்லாவிட்டால் நிதியுதவி நிறுத்தப்படும்... மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

மத்திய அரசின் திட்டங்களில் பிரதமர் மோடியின் படம் இல்லாவிட்டால் நிதியுதவி நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் கூறினார்.

திருப்பதி வந்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் நிருபர்களிடம் பேசும்போது, “பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அளித்தால், அதை ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் அரசு பயன்படுத்திக்கொண்டு, அனைத்தையும் தாங்களே செய்ததை போன்று விளம்பரம் செய்கிறார்கள்.

மத்திய அரசின் ஒத்துழைப்பு உள்ள ஒவ்வொரு திட்டத்திலும் மோடியின் புகைப்படம் இடம்பெற வேண்டும். இல்லையேல் நிதியுதவியை நிறுத்துவோம். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் மாநில மக்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு ஏமாற்றும்? மாநிலத்தின் பெரும்பாலான வளர்ச்சி மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படுகிறது” இவ்வாறு அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in