ஊசி முதல் சுத்தியல் வரை... ரேஷன் துவங்கி டீசல் வரை; நீண்ட போராட்டத்திற்கு தயாரான விவசாயிகள்!

ஊசி முதல் சுத்தியல் வரை... ரேஷன் துவங்கி டீசல் வரை; நீண்ட போராட்டத்திற்கு தயாரான விவசாயிகள்!

ஊசி முதல் சுத்தியல் வரை... ரேஷன் பொருட்களில் துவங்கி டீசல் வரை அத்தனை அத்தியாவசியப் பொருட்களுடன் பல மாத போராட்டத்திற்கு தயார் நிலையில் டெல்லியை நோக்கி பல்லாயிரக்கணக்கில் அணிவகுத்துச் செல்கிறார்கள் விவசாயிகள்.

தங்களது பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு விவசாயிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். முன்னதாக விவசாயிகள் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், போராட்டத்தை நீர்த்துப் போவ செய்வதற்காக இன்று முதல் அடுத்த ஒரு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் எல்லையில், செய்தி நிறுவனங்களிடம் பேசும் விவசாயிகள், "ஊசி முதல் சுத்தியல் வரை எங்களுக்குத் தேவையான அனைத்தும் உள்ளன. ஆறு மாத காலம் வரை கூட தொடர்ந்து போராட தேவையான ரேஷன் பொருட்கள் எங்களிடம் உள்ளது" என்கிறார்கள்.

"கடந்த முறை 13 மாதங்களாக நாங்கள் தொடர்ந்து போராடினோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட பின்னரே போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால் அரசாங்கம் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. இந்த முறை, எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின்னரே நாங்கள் வெளியேறுவோம்" என்கிறார் இன்னொரு விவசாயி.

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இருந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தலைநகரை நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்த தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளனர். பெரும்பாலான எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், எல்லைப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

'டெல்லி சலோ' பேரணியைத் தடுக்கும் வகையில், நேற்று இரண்டு மத்திய அமைச்சர்கள் விவசாய சங்கத் தலைவர்களைச் சந்தித்து பேசினார்கள். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகள் எதிலும் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இன்றைய பேரணியை தடுத்து நிறுத்த முடியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in