டிஜிட்டல் புரட்சி முதல் செயற்கை நுண்ணறிவு வரை... பில்கேட்ஸுடன் விவாதித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ்
பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ்

பிரதமர் மோடியை, மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் சந்தித்து ஏஐ தொழில்நுட்பம், இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் அவரை சமீபத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பிரதமர், தொழில்நுட்ப ஜாம்பவானான பில்கேட்ஸுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார்.

அப்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான ஆபத்துகள் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், சரியான பயிற்சி அளிக்கப்படாவிட்டால், மக்கள் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடும் எனவும், மக்கள் ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு மாய கருவியாகப் பயன்படுத்தினால், அது கடுமையான அநீதிக்கு வழிவகுக்கும்" என்றார்.

இந்த சந்திப்பின்போது பில்கேட்ஸிடம் பிரதமர், ”முறையான பயிற்சி இல்லாமல் ஒருவருக்கு ஏஐ போன்ற ஒரு நல்ல விஷயம் வழங்கப்பட்டால், அது தவறாகப் பயன்படுத்தப்படலாம். யாரும் தவறாக வழிநடத்தப்படாமல் இருக்க ஏஐ படைப்புகளில் தெளிவான வாட்டர்மார்க்குகள் இடம்பெற வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன்.

டிஜிட்டல் இந்தியா
டிஜிட்டல் இந்தியா

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் டீப்ஃபேக்கைப் பயன்படுத்த முடியும். டீப்ஃபேக் படைப்புகள் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம். இதில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்” என்றார்.

இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் டிஜிட்டல் புரட்சி குறித்த விவாதமும் இடம்பெற்றது. இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் போது, இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியை உலக தலைவர்கள் வியந்ததாக பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியைப் பாராட்டி பில்கேட்ஸ் கூறுகையில், "இந்தியா தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வது மட்டுமின்றி, வழிநடத்தவும் செய்கிறது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in