இன்ஸ்டா பழக்கம் லாட்ஜ் வரை சென்றது: தொழிலதிபரிடம் நகையைத் திருடிய பெண்ணுக்கு வலை

இன்ஸ்டா பழக்கம் லாட்ஜ் வரை சென்றது: தொழிலதிபரிடம் நகையைத் திருடிய  பெண்ணுக்கு வலை

இன்ஸ்டாகிராம் மூலம் தொழிலதிபருடன் பழகி அவரோடு அறையெடுத்துத் தங்கிய இளம் பெண், 9 பவுன் நகைகளைத் திருடிக்கொண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட். தொழிலதிபரான இவர் கார்களையும் வாங்கி விற்று வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணோடு அறிமுகம் கிடைத்தது. அவர் தனக்கு மதுரை என்றும் தன் பெயர் சத்யா(29) என்றும், ஆல்பர்ட்டிடம் அறிமுகமானார். கடந்த மூன்று மாதங்களாக இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசிக்கொண்ட நிலையில், ஆல்பர்ட் தான் கன்னியாகுமரிக்கு செல்வதாகவும், விரும்பினால் நீயும் வா என சத்யாவை அழைத்துள்ளார்.

இதையடுத்து சத்யாவும், ஆல்பர்ட்ம் கன்னியாகுமரியில் ஒரு விடுதியில் அறை எடுத்துத்தங்கி பல இடங்களிலும் சுற்றிப் பார்த்தனர். நேற்று முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் சென்று புகைப்படங்களாக எடுத்துக்கொண்டனர். இரவும் சேர்ந்தே தங்கிய நிலையில் இன்று காலையில் ஆல்பர்ட் கண்விழித்துப் பார்த்தபோது, சத்யா அவருடன் இல்லை. முதலில் சாதாரணமாக வெளியே சென்றிருப்பார் எனத் தேடிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆல்பர்ட் தன் கைப்பையில் வைத்திருந்த கழுத்தில் போடக்கூடிய 7 பவுன் தங்கச் சங்கிலி, தலா ஒரு பவுன் எடைகொண்ட இரு தங்க மோதிரங்கள் ஆகியவையும் மாயமாகியிருந்தது. இதுகுறித்து விடுதி உரிமையாளரிடம் ஆல்பர்ட் முறையிட, அவர்கள் மூலம் தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in