கத்தியால் குத்தி வாலிபரை கொலை செய்த நண்பர்கள்: உடலைக் கல்லால் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்

கத்தியால் குத்தி வாலிபரை கொலை செய்த நண்பர்கள்: உடலைக் கல்லால் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்

உத்தமபாளையத்தில் சினிமா பாணியில்  வாலிபரை  கத்தியால் குத்திக் கொன்று உடலைக்  கல்லால் கட்டி கிணற்றில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய சர்ச் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் கிருத்திக் செல்வா (20).  கூலித்தொழிலாளியான இவருக்கு  திருமணமாகவில்லை. டிச. 24-ம் தேதி வீட்டில் இருந்து, வெளியே சென்ற கிருத்திக் செல்வா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அவரைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால்  உத்தமபாளையம் போலீிஸில் கிருத்திக்செல்வாவின் தாய் செல்வி புகார்  அளித்தார். இதையடுத்து எஸ்.ஐ  திவான் மைதீன்,  வழக்குப்பதிந்து  விசாரித்து  வந்தார். இந்த நிலையில், டிச.24- ல் உள்ளூரில் இருந்த கிருத்திக் செல்வா, அவரது நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும்,  விசாரணையில் தெரியவந்தது.

இதனால், அவரது நண்பர்களிடமும்  போலீஸார் விசாரித்தனர். சந்தேகத்தின் பேரில் அவரது நெருங்கிய  நண்பர் ஒருவரைப்  பிடித்து போலீஸார்  விசாரித்தனர். கிருத்திக் செல்வாவுக்கு, அவரது நெருங்கிய  நண்பர்களுக்கும், இடையே டிச.24-ல்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த, நண்பர்கள் வஞ்சகமாக பேசி  உத்தமபாளையம் தாமஸ் காலனி பகுதியில் உள்ள  தோட்டக்கிணறு அருகே அழைத்து சென்றனர். 

அங்கு அவரைக் கத்தியால் குத்தினர். இதில் சரிந்து விழுந்த கிருத்திக் செல்வா  உடலில் கல்லைக் கட்டி, சினிமா பாணியில் 30 அடி ஆழக்கிணற்றில் வீசிச்சென்றது விசாரணையில் தெரிந்தது. இதனையடுத்து  உத்தமபாளையம் உதவி எஸ்.பி மது குமாரி தலைமையில்,  போலீஸார் சம்பவம் இடத்திற்குச் சென்று தீயணைப்பு துறையினர் மூலம் கிருத்திக் செல்வா  உடலை மீட்டனர். இக்கொலை தொடர்பாக  போலீஸில் சிக்கிய  கிருத்திக் செல்வாவின் நண்பர்கள் மூன்று பேரிடம் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து  வருகின்றனர்.  இந்த சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in