செல்போன் பார்த்துக் கொண்டிருந்த வாலிபரைச் சுற்றி வளைத்து வெட்டிக்கொன்ற நண்பர்கள்: தடுக்க வந்த சித்திக்கும் அரிவாள் வெட்டு

செல்போன் பார்த்துக் கொண்டிருந்த வாலிபரைச் சுற்றி வளைத்து வெட்டிக்கொன்ற நண்பர்கள்: தடுக்க வந்த சித்திக்கும் அரிவாள் வெட்டு

மதுரையில் வீடு புகுந்து வாலிபரை வெட்டிக் கொலை செய்த அவரது நண்பர்கள் 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(25). மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவர் நேற்று இரவு வீட்டிற்குள் அமர்ந்து செல்போன் பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென பிரகாஷை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

மேலும், தடுக்க முயன்ற பிரகாஷின் சித்தி வாசுகியையும் காலில் வெட்டிவிட்டு அவர்கள் தப்பி ஓடினர். தொடர்ந்து, இதுகுறித்து பிரகாஷ் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும், உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் 6 பேரும் பிரகாஷின் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. எதற்காக அவரைக் கொலை செய்தனர் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in