ரயிலுக்கு காத்திருந்த பயணிகள் மீது சரக்கு ரயில் மோதி கோர விபத்து: 3 பேர் உடல் நசுங்கி பலி

ரயிலுக்கு காத்திருந்த பயணிகள் மீது சரக்கு ரயில் மோதி கோர விபத்து: 3 பேர் உடல் நசுங்கி பலி

ஒடிசாவில் ரயிலுக்குக் காத்திருந்த பயணிகள் மீது சரக்கு ரயில் மோதியதில் மூன்று பேர் பலியானார்கள்.

ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் கோரே ரயில் நிலையத்தில் இன்று காலையில் புவனேஸ்வர் செல்லும் உள்ளூர் ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் ஓய்வறையில் காத்திருந்தனர். அப்போது அதி வேகமாக வந்த சரக்கு ரயில் ஓய்வறையின் மீது பயங்கரமாக மோதி தடம் புரண்டது.

இதில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் சரக்கு ரயிலின் சக்கரத்தின் அடியில் சிக்கினர். இதனால் இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், இருவர் படுகாயம் அடைந்ததாகவும் ரயில்வே போலீஸார் தெரிவித்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in