மீனவர்களின் வாரிசுகள் கடற்படையில் சேர அரிய வாய்ப்பு: மாதந்திர உதவித்தொகையும் உண்டு

மீனவர்களின் வாரிசுகள் கடற்படையில் சேர அரிய வாய்ப்பு: மாதந்திர உதவித்தொகையும் உண்டு

மீனவர்களின் வாரிசுகள் கடற்படையில் பணியில் சேரும்வகையில் மாதாந்திர உதவித் தொகையுடன் கூடிய இலவச பயிற்சியினை இந்திய கடற்படை ஒருங்கிணைக்கிறது.

இதுகுறித்து கடலோரக் காவல்படை அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களை இந்தியக் கடலோரக் காவல்படை, நவிக், மாலுமி பணிகளில் அமர்த்தும்வகையில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோரக் குழுமத்தின் மூலம் நடத்தப்படுகிறது. 

இதில் ஏற்கெனவே ஒருமுறை 90 நாள் பயிற்சி வகுப்பு நடந்துமுடிந்துவிட்ட நிலையில் அடுத்த பிரிவினருக்கான பயிற்சி வகுப்பு பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் நடைபெற உள்ளது. மொத்தம் 90 நாள்களுக்கான இந்த பயிற்சியில் சேர மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஆயிரம் ரூபாய் பயிற்சியின் போது ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை கடலோர மீன்வளத்துறை அலுவலகங்களில் இருந்தும், மீனவ கூட்டுறவு சங்கங்கள், கடற்கரையோர ரேஷன் கடைகளிலும், இணையம் வழியாகவும் பெறலாம்.

கன்னியாகுமரி, ராமநாதபுரம், கடலூர் ஆகிய மூன்று மையங்களில் இந்த பயிற்சிவகுப்பு நடைபெறும். தேர்வு பெறுவோருக்கு உணவு, தங்கும் இடம், பயிற்சி கையேடு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இதில் 12-ம் வகுப்பில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் ”என்றார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in