திருச்செந்தூர் கோயிலில் இலவச திருமணம்; தங்கம், பாத்திரம் சீர்வரிசை: பிப்.3-க்குள் விண்ணப்பிக்கவும்!

திருச்செந்தூர் கோயிலில் இலவச திருமணம்; தங்கம், பாத்திரம் சீர்வரிசை: பிப்.3-க்குள் விண்ணப்பிக்கவும்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இலவச திருமணம் செய்துகொள்ள விரும்பும் மணமக்கள் வரும் பிப்ரவரி 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திருமணங்கள் பிப்ரவரி 23-ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்துத் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை மணமக்களுக்கு இலவசத் திருமணம் நடத்திவைக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி இலவச திருமணம் நடக்க உள்ளது.

இதில் மணப்பெண்ணுக்கு திருமாங்கல்ய வகைக்கு பத்தாயிரம் மதிப்பில் இரண்டு கிராம் தங்கம், இரண்டாயிரம் மதிப்பில் மணமகள் ஆடை, ஆயிரம் ரூபாய் மதிப்பில் மணமகன் ஆடை, மணமக்கள் வீட்டார் இருதரப்புக்கும் உணவு 20 நபருக்கு 2 ஆயிரம், 1000 ரூபாய் மதிப்பில் திருமண மாலை மற்றும் மலர்கள், எதிர்பாராத செலவு ஆயிரம், பாத்திரம் வகைக்கு 3000 என மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. இது முழுக்க மணமக்களுக்கு இலவசம். கட்டணமில்லாத சேவையாகும்.

இதில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் தம்பதிகள் வரும் 3-ம் தேதிக்குள், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in