கிராமத்தில் பழங்குடியினர் குழந்தைகளுக்கு இலவச கல்வி மையம்: பெற்றோர்கள் நெகிழ்ச்சி

இலவச கல்வி மையம்
இலவச கல்வி மையம் கிராமத்தில் பழங்குடியினர் குழந்தைகளுக்கு இலவச கல்வி மையம்: பெற்றோர்கள் நெகிழ்ச்சி

திருவள்ளூரில் உள்ள கிராமத்தில் பழங்குடியினர் குழந்தைகளுக்கு இலவச கல்வி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இலவச கல்வி மையத்தால் பழங்குடியினர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவள்ளுர் மாவட்டம், புன்னம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழங்குடியினர் காலனியில் நியூ ஃபேஸ் பவுண்டேஷன் சார்பில் குழந்தைகளுக்கான கல்வி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நியூ ஃபேஸ் பவுண்டேஷனின் நிறுவனர் சங்கர் கல்வி மையம் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். அப்போது இந்த கல்வி மையம் இந்த பகுதி குழந்தைகளுக்காக நிரந்தரமாக செயல்படும் என்றும், குழந்தைகளுக்காக பயிற்சி அளிக்க தனியாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த பகுதியில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அறிவைத் தருவதே எங்கள் பவுண்டேஷன் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

புன்னம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் சுந்திரமுர்த்தி, ஒத்திக்காடு ஊராட்சித் மன்றத் தலைவர் தாமஸ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் விமலாகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கல்வி மையத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர். அப்போது அவர்கள், தங்கள் ஊர் மக்களுக்கு கல்வி செல்வத்தை அளிக்க முன்வந்துள்ள நியூ ஃபேஸ் பவுண்டேசனுக்கு மனமார்ந்த நன்றி என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, கல்வி மையத்தை நிர்வகித்து வரும் ஆசிரியை விசாலாட்சிக்கு பவுண்டேஷன் சார்பில் 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட அவர், பவுண்டேஷன் நோக்கம் நிறைவேறும் வகையில் இந்த கல்வி மையம் சிறப்பாக செயல்பட பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார்.

பழங்குடியின குழந்தைகள்
பழங்குடியின குழந்தைகள்

பின்னர் நியூ ஃபேஸ் பவுண்டேஷன் பொதுச் செயலாளர் சிவகுமார் நிகழ்ச்சியில் பேசும்போது, “எங்கள் பவுண்டேஷன் சார்பில் இந்த பகுதியில் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட கல்வி மையம் படிப்படியாக வளர்ந்து, ஐ.ஏ.எஸ். பயிற்சி மையமாக வளர நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கான அனைத்து முற்சிகளையும் எங்கள் பவுண்டேஷன் செய்து தரும் என்று உறுதி அளிக்கிறோம்” என்றார்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் படிப்புகளுக்கான நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவை வழங்கப்பட்டன. இறுதியாக பவுண்டேஷன் செயலாளர் சுகன் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பவுண்டேஷன் நிர்வாகிகள் ஸ்ரீபன், சக்திவேல், தினேஷ், ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in