‘முகநூல் மூலம் 6 மாப்பிள்ளைகளுக்கு வலை’; மோசடி பெண்ணை மடக்கிய போலீஸ்!

முகநூல் வாயிலாக மோசடி
முகநூல் வாயிலாக மோசடி

பல ஆண்களை ஏமாற்றி மோசடியாகத் திருமணம் செய்த பெண்ணை விழுப்புரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(31). இவர் வளத்தில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் ’முகநூல் மூலம் ஒரு பெண்ணிடம் பழகினேன். நாங்கள் காதலித்து திருமணம் செய்தோம். என்னோடு அவர் 28 நாள்கள் சேர்ந்து வாழ்ந்தார். இந்நிலையில் ’எனது வீட்டின் சொத்துப் பிரச்சினை ஒன்றை தீர்த்து எனக்கான பங்கை வாங்கி வருகின்றேன்’ எனச் சொல்லிச் சென்ற மனைவில் அதன் பின்னர் திரும்பிவரவில்லை. என் வீட்டில் இருந்து செல்லும்போது 8 பவுன் நகைகள், ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார்.பின்னர் சேர்ந்து வாழ அழைத்தபோது எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்’ என மணிகண்டன் தெரிவித்திருந்தார்.

இதன் பேரில் வளத்தில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டபோது அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்தது. அதில், மணிகண்டனை ஏமாற்றியது நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலெட்சுமி எனத் தெரியவந்தது. அவர் இதற்கு முன்பும் முகநூல் மூலம் பலரை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளதாகவும், மணிகண்டனை அவர் 5-வதாக திருமணம் செய்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து ஆறாவதாக சேலம் குமாரபாளையத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து, இப்போது அவரோடு வாழ்ந்து வந்ததும் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து மோசடி பெண் மகாலெட்சுமியைக் கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in