15 சிம்பாக்ஸ்கள், 1700 சிம்கார்டுகள் பறிமுதல்: போலீஸை அதிரவைத்த மோசடி மன்னன்

15 சிம்பாக்ஸ்கள், 1700 சிம்கார்டுகள் பறிமுதல்: போலீஸை அதிரவைத்த மோசடி மன்னன்

வெளி நாட்டு போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்த நபரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 15 சிம் பாக்ஸ்கள், 1700க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் மற்றும் மோடம்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த தனியார் சிம்கார்டு நிறுவன மேலாளர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், சட்டத்திற்கு புறம்பான டெலிகாம் எக்சேஞ்கள் செயல்படுகிறது என்பதை கண்டறிந்துள்ளதாகவும், இதனால் தங்களுக்கு மிகப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீஸார் கேரள மாநிலம் மல்லாபுரத்தைச் சேர்ந்த பஷீர் என்பரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ராயப்பேட்டை மற்றும் சிஐடி நகரில் மறைத்து வைத்திருந்த 15 சிம்பாக்ஸ்கள், 1700 க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் பஷிருக்கு சவுதியைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவர் வாட்ஸ்ஆப் மூலம் அறிமுகமாகி அவர் மூலம் சிம்கார்டுகள் மற்றும் மோடம்கள் கொண்ட சிம்பாக்ஸ்கள் வாங்கி வெளிநாடு போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பஷீரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in