கோவை தொண்டு நிறுவனம் பெயரில் குமரியில் மோசடி: கர்நாடக வாலிபர்கள் இருவர் கைது

கோவை தொண்டு நிறுவனம் பெயரில் குமரியில் மோசடி: கர்நாடக வாலிபர்கள் இருவர் கைது

கோவை தொண்டு நிறுவனத்தின் பெயரில் போலி ரசீதை வைத்து குமரி மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட கர்நாடக வாலிபர்கள் இருவரைப் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கணியான்விளையைச் சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகன் விக்னேஷ்(32) எலெட்ரீசியனாக உள்ளார். இவர் நேற்றுமாலை வீட்டில் இருக்கும்போது நன்கொடை கேட்டு இருவாலிபர்கள் வந்தனர். அவர்கள் கையில் இருந்த ரசீதில், கோவை அன்புமலர் உடல் ஊனமுற்றோர் சமூக நலவாழ்வு மையம் என்னும் என்.ஜி.ஓ பெயர் இருந்தது. ஆனால் அவர்கள் தமிழையே திக்கித் திணறிப் பேசுவதைப் பார்த்து சந்தேகம் அடைந்த விக்னேஷ் அந்த நன்கொடை ரசீதில் இருந்த அலைபேசி எண்ணுக்கு போன் செய்தார். அப்போது அந்த என்.ஜி.ஓ தரப்பு மேற்படி வாலிபர்கள் தங்கள் ஊழியர்கள் இல்லை எனவும், தாங்கள் யாரிடமும் குமரி மாவட்டத்தில் நிதிபிரிக்கச் சொல்லவில்லை எனவும் சொன்னார்கள்.

இதனைத் தொடர்ந்து இரு வாலிபர்களையும் தன் பகுதிவாசிகள் உதவியுடன் விக்னேஷ் குளச்சல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் வாலிபர்கள் கர்நாடக மாநிலம் பிஜப்பூர் குந்தவன் பகுதியைச் சேர்ந்த சச்சின் திலீப் ஜெகதாப்(24), பாரத் லெட்சுமணன் சவான்(26) ஆகியோர் எனத் தெரியவந்தது. இரு வாலிபர்களும் கடந்த இருமாதங்களாகவே குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் குடில் அமைத்து தங்கியிருந்து ஊர், ஊராகப் போய் நிதி பிரிந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மோசடிச் செயலில் ஈடுபட்ட இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in