பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்: தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணம்!

கயலை மணமுடித்து கலைராஜன்
கயலை மணமுடித்து கலைராஜன்

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டுப் பெண்ணை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

கலைராஜன் - கயல் தம்பதியினர்
கலைராஜன் - கயல் தம்பதியினர்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த அமராவதி புதூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் குடும்பத்துடன் பிரான்ஸ் நாட்டில் தங்கி பணியாற்றி வருகிறார். இவரது மகன் கலைராஜனுக்கு அங்குள்ள கல்லூரியில் கணினி அறிவியல் படிக்கும்போது கயல் என்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் கலைராஜனின் சொந்த கிராமமான அமராவதி புதூரில் உள்ள அவரது வீட்டில் இன்று இருவருக்கும் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

திருமணத்தில் கலந்துகொண்ட அமைச்சர்
திருமணத்தில் கலந்துகொண்ட அமைச்சர்

மணமகன் வீட்டில் நடைபெற்ற இத்திருமணத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in