கை, கால்களைக் கட்டி 4-ம் வகுப்பு மாணவி கொலை: தந்தை தலைமறைவு

கொலை
கொலை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் நான்காம் வகுப்புப் படிக்கும் மகளையே கொலை செய்துவிட்டு கொடூரத் தந்தை தலைமறைவாகி இருப்பதாக போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து(42) டெய்லராக உள்ளார். இவரது மனைவி ப்ரியதர்ஷினி. இந்தத் தம்பதியினரின் ஒரே மகளான தர்ஷினி(8) நான்காம் வகுப்பு படித்துவந்தார். காளிமுத்துவுக்கும், அவரது மனைவி ப்ரியதர்ஷினிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்கள் வீட்டில் எப்போதுமே சண்டை சத்தம் கேட்கும். இந்நிலையில் ப்ரியதர்ஷினியிடம் கடந்த 3_ம் தேதி சண்டை போட்ட காளிமுத்து, தன் மகள் தர்ஷினியை அழைத்துக்கொண்டு சிவகங்கையில் இருக்கும் தன் அக்கா வீட்டிற்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஆனால் காளிமுத்து அக்கா வீட்டிற்கும் செல்லவில்லை. இருவரும் மாயமாகி இருந்தனர். இதனால் ப்ரியதர்ஷினியும் தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் ப்ரியத்ஷினியிடம் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். ப்ரியதர்ஷினி வீட்டுக்குப் போய் பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த ஒரு பரணியில் தர்ஷினி சடலமாக இருந்தார். ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாளிக்குள் வைத்து மூட்டையாகக் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.

தன் மனைவியோடு எழுந்த சண்டையில் பெற்ற மகளை காளிமுத்துவே கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்னும் கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in