கடலில் குளித்த நான்குபேர் மாயம்: விடுமுறை நாளில் அலை ஏற்படுத்திய சோகம்

கடலில் குளித்த நான்குபேர்  மாயம்: விடுமுறை நாளில் அலை ஏற்படுத்திய சோகம்

திருவொற்றியூரில் குடும்பத்துடன் கடலில் குளிக்கச் சென்ற போது ராட்சத அலையில் சிக்கி சிறுவர், சிறுமிகள் 4 பேர் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் கரீன் மொய்தீன். விடுமுறை நாளான இன்று இவரும், இவரது குடும்பத்தினருமாக 9 பேர் ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் திருவொற்றியூர் பலகை தொட்டிகுப்பம் அருகில் குளிக்கச் சென்றன்ர்.

உற்சாகமாக இவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ராட்சத அலை ஒன்று எழுந்தது. இதில் கரீன் மொய்தீனுடன் சென்றிருந்த கபீர்(24), சிறுமிகள் அம்ரீன்(18), ஆபான் (14), அவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சபரி(14) ஆகியோரை கடல் அலை இழுத்துச் சென்றது. இவர்கள் இதில் மாயமாகினர். இவர்களது குடும்பத்தினர் இவர்களை எவ்வளவோ தேடியும் முடியவில்லை. அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த மீனவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் மாயமானவர்களின் நிலை பற்றித் தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீயணைப்பு போலீஸாரும் மாயமானவர்களைத் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in