ரயிலில் வந்த ஹவாலா பணம் 2 கோடி: பேரம் பேசிய இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் முருகன்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் முருகன்ரயிலில் வந்த ஹவாலா பணம் 2 கோடி: பேரம் பேசிய இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி பயணி கொண்டு வந்த ஹவாலா பணம் 2 கோடியை பறிமுதல் செய்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பேரம் பேசிய இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து ரயில்வே டிஐஜி விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் முறையான ஆவணங்கள் எதுவுமின்றி இரண்டு கோடி ரூபாய் ஹவாலா பணத்தை பயணி ஒருவர் நேற்று கொண்டு வந்துள்ளார்.

இதனைக் கண்டுபிடித்த ரயில்வே குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் முருகன் ( பொறுப்பு )  சப் இன்ஸ்பெக்டர் குமார், காவலர்கள் தினேஷ், சுதாகர் ஆகியோர் உயர் அதிகாரிகளுக்கு இந்த விவகாரம் தொடர்பாக தகவல் தெரிவிக்காமல் ஹவாலா பணத்தைக் கொண்டு வந்த பயணியிடம் பேரம் பேசியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறை டிஐஜி விஜயகுமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விசாரணையில் பேரம் பேசியதை காவலர்கள் ஒப்புக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் முருகன் உட்பட நான்கு பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து ரயில்வே காவல்துறை டிஐஜி விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் துறை ரீதியான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கவும் அவர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in