கைவிட்ட நெருங்கிய உறவுகள்; வறுமையால் உயிரை மாய்த்த தாய், மகன்: ஆபத்தான நிலையில் தந்தை, மகனுக்கு சிகிச்சை!

கைவிட்ட நெருங்கிய உறவுகள்; வறுமையால் உயிரை மாய்த்த தாய், மகன்: ஆபத்தான நிலையில் தந்தை, மகனுக்கு சிகிச்சை!

கேரள மாநிலம் திருச்சூரில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் தீக்குளித்தனர். இதில் தாய், மகன் என இருவரும் துடித்துடித்து உயிரிழந்தனர். படுகாயங்களுடன் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள விஸ்மடை பகுதியைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவரது மனைவி சாந்தி. இந்தத் தம்பதிக்கு கார்த்திக், ராகுல் என இருமகன்கள். ராதா கிருஷ்ணன் சிறுதொழில் செய்து வருகிறார். ஆனால் அவரது தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அன்றாட வாழ்வை ஓட்டுவதிலேயே ராதாகிருஷ்ணனின் குடும்பம் பெரும் சிரமத்தை எதிர்கொண்டது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உதவி கேட்டும் ராதாகிருஷ்ணனுக்கு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள முடிவெடுத்தவர்கள் வீட்டில் சமையலறை பயன்பாட்டிற்காக வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து மேலே ஊற்றி தீவைத்துக் கொண்டனர். அப்போது வீட்டில் இருந்து அதிகளவில் புகை வந்ததால் அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது நான்குபேருமே தீயில் எரிந்து கொண்டிருந்தனர். அதில் சாந்தியும், அவரது மூத்த மகனும் உயிரிழந்தனர். மீதமுள்ள இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in