இளம் வயது புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து: கோலியை ஆச்சரியப்படுத்திய டொனால்ட் டிரம்ப்

இளம் வயது புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து: கோலியை ஆச்சரியப்படுத்திய டொனால்ட் டிரம்ப்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கோலியின் இளம் வயது புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக வலம் வருபவர் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல வெற்றிகளை குவித்த கோலிக்கு இன்று பிறந்தநாள். தனது 34-வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கும் கோலிக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், விராட் கோலியின் இளம் வயது புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் டொனால்ட் டிரம்ப் இந்திய வீரர் கோலிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கோலி இதுவரை 8074 ரன்கள் குவித்துள்ளார். இதில் 27 சதம், 28 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 254 ரன்கள் எடுத்துள்ளார். 2008-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் அறிமுகமான கோலி, இதுவரை 12344 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 43 சதங்களும், 64 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 183 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டியில் 3932 ரன்கள் விளாசியுள்ளார். இதில் ஒரு சதம், 36 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 122 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக 1000 ரன்களுக்க மேல் குவித்துள்ள முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in