உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் மனைவி திடீர் மரணம்

உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் மனைவி திடீர் மரணம்

உத்தர பிரதேசம் மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா உடல்நலக்குறைவால் இன்று திடீரென மரணம் அடைந்தார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா நுரையீரல் தொற்று காரணமாக குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிற்பகலில் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவரது மறைவுக்கு உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, அரியானா முதல்வர் மனோகர் லால் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். "முலாயம் சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கடவுள் வலிமை அளிக்கட்டும்" என்று கூறியுள்ளனர்.

சாதனா குப்தா முலாயம் சிங்கின் இரண்டாவது மனைவியாகும். இவரது மகன் பிரதீக் யாதவ். பாஜகவை சேர்ந்த அபர்ணா இவரது மருமகள் ஆவார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in