தன் பணியைப் பாராட்டி மலர் மாலை அணிவித்த பிரதமர் நேருவை, தங்கள் சமூகத்தினர் வலியுறுத்தலால் குல வழக்கப்படி கணவராக பாவித்து கொண்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் தற்போது மரணம் அடைந்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, 1959- ம் ஆண்டு டிசம்பரில் மேற்குவங்கம், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இடைப்பட்ட தன்பாத் பகுதியில் பஞ்செட் அணை திறக்கப்பட்டது. இதனைப் பழங்குடியை சேர்ந்த ஒருவர் திறந்து வைக்க வேண்டும் என எண்ணிய நேரு, அணைக்கட்டும் பணியில் ஈடுபட்ட 16 வயது சந்தால் பழங்குடியின பெண்ணான பத்னி மஞ்சியாயின் என்பவரை வைத்து அணையைத் திறக்க வைத்தார்.
அணை கட்டும் பணியில் ஈடுபட்டதோடு அணையைத் திறந்து வைத்த அவரை பாராட்டும் விதமாக பத்னிக்கு மலர் மாலை ஒன்றை நேரு அணிவித்துள்ளார். ஆனால் மலர் மாலை அணிவித்ததால், சந்தால் பழங்குடியின வழக்கப்படி நேரு - பத்னி மஞ்சியாயினுக்கு திருமணம் நடைபெற்றதாக அந்த இனத்தை சேர்ந்தவர்கள் கருதினர். அத்துடன் பழங்குடி அல்லாத ஒருவரை திருமணம் செய்ததற்காக பத்னியை, சந்தால் பழங்குடியினர் புறக்கணித்தனர்.
அவர்களது கிராமத்திற்குள் நுழையவும் தடை விதித்தனர். இதனால் பத்னியின் வாழ்க்கையே மாறியது. பின்னர் அங்கிருந்து வெளியேறி பஞ்செட் பகுதியில் வசித்தார். அங்கு அவருக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்று, குழந்தைகளும் பிறந்தன.
நாட்டின் முதல் பிரதமரான நேருவின் முதல் பழங்குடியின மனைவி என அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்ட பத்னி பற்றி அறிந்த ராஜீவ், பிரதமராக இருந்தபோது 1985-ல் மேற்குவங்கம் மாநிலம் அசன்சோலுக்கு சென்றபோது, அங்குள்ள காங்கிரஸ் தலைவர் மூலமாக பத்னியை சந்தித்தார்.
முன்பு நடந்த துயரத்தை எடுத்துக் கூறிய பத்னிக்கு, தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் (டி.வி.சி) பணி வழங்க ராஜீவ் உத்தரவிட்டார். அதில் பணியாற்றிய பத்னி, 2005-ல் ஓய்வு பெற்றார். தனது மகள் ரத்னாவின் வீட்டில் வசித்துவந்த அவர் கடந்த நவ.17-ம் தேதியன்று தனது 80வது வயதில் காலமானார்.
இதையும் வாசிக்கலாமே...
ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா
நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!
அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!
மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!
அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!