முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் மறைந்தார்

வாட்டிகன் அறிவிப்பு
போப் 16-ம் பெனடிக்ட்(இடது) உடன் போப் முதலாம் பிரான்சிஸ்
போப் 16-ம் பெனடிக்ட்(இடது) உடன் போப் முதலாம் பிரான்சிஸ்

முன்னாள் போப், 16-ம் பெனடிக்ட் காலமானார் என வாட்டிகன் அறிவித்துள்ளது.

95 வயதாகும் 16-ம் பெனடிக்ட் முதுமை தொடர்பான உடல்நலக் கோளாறுகளால் சிகிச்சையில் இருந்தார். 2 தினங்களுக்கு முன்னர், தற்போதைய போப் முதலாம் பிரான்சிஸ் அவரை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது முன்னாள் மற்றும் இந்நாள் போப்புகள் ஆதுரமாய் கைகள் பற்றியிருந்த புகைப்படங்களை வெளியிட்டு வாட்டிகன் நெகிழ்ச்சி அடைந்தது. போப் முதலாம் பிரான்சிஸ், கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட்க்காக பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் இன்று காலை போப் 16-ம் பெனடிக்ட் மறைந்ததாக வாட்டிகன் அறிவித்தது. 2013-ல், அப்போது போப் 16-ம் பெனடிக்ட் வயது முதுமையை காரணமாக்கி பதவி விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து அர்ஜென்டினாவை சேர்ந்த ஆர்ச் பிஷப்பான ஜார்ஜ் மரியோ பெர்க்கோக்லியோ என்பவர் போப் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரில் பொறுப்புகளை ஏற்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in