மாஞ்சோலைக்குச் சுற்றுலா செல்ல வனத்துறை சிறப்பு வாகனம்: முன்பதிவு செய்வது எப்படி?

மாஞ்சோலை
மாஞ்சோலை மாஞ்சோலைக்குச் சுற்றுலா செல்ல வனத்துறை சிறப்பு வாகனம்: முன்பதிவு செய்வது எப்படி?

திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலைக்குச் சுற்றுலா செல்ல வனத்துறை மூலம் சிறப்பு வாகனம் இயக்கப்படுகின்றது. அதில் முன்பதிவு செய்து பயணிக்க வனத்துறை பிரத்யேக எண்ணை அறிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உள்ளது. இதன் இயற்கை எழில் சூழ்ந்த ரம்மியமான காட்சிக்காக இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படை எடுப்பது வழக்கம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலரும் தங்கள் சொந்த வாகனத்தில் வருகின்றனர். இதேபோல் வனத்துறை சார்பிலும் வாகனம் இயக்கப்படுகிறது.

இதுவரை இந்த வாகனத்தில் 25 பேர் மட்டுமே செல்லும் அளவுக்கே வசதி இருந்தது. இதனால் அதற்கு மேல் வரும் சுற்றுலாப் பயணிகள் வாகன வசதியின்றி சிரமம் அடைந்தனர். இந்நிலையில் வனத்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு வாகனத்திலும் 10 பேர் பயணிக்க முடியும். இதேபோல் 22 பேர் பயணிக்கும் வாகனமும் உள்ளது.

மாஞ்சோலைக்குச் சுற்றுலா செல்ல விரும்பும் சுற்றுலாவாசிகள் மணிமுத்தாறு வாகனச் சோதனைச் சாவடியில் கட்டணம் செலுத்திச் செல்லலாம். அல்லது அம்பை வனச்சரக அலுவலகத்தில் 04634 252594 என்ற எண்ணுக்கு முன்பதிவு செய்து இந்தச் சேவையை பயன்படுத்திச் செல்லலாம் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in