உற்சாகத்துடன் பொங்கல் வைத்த வெளிநாட்டினர் - கன்னியாகுமரியில் களைகட்டிய பாரம்பரிய விழா!

உற்சாகத்துடன் பொங்கல் வைத்த வெளிநாட்டினர் - கன்னியாகுமரியில் களைகட்டிய பாரம்பரிய விழா!

கன்னியாகுமரி சந்தையடி பகுதியில் வெளிநாட்டவர்கள் பலரும் கிராம மக்களுடன் இணைந்து பொங்கலிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையை வெளிநாட்டவர்களும் உற்சாகத்துடன் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகம் எங்கும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. இதற்காக தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் முன்கூட்டியே பொங்கல் வைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சந்தையடி பகுதியில், தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை மற்றும் சந்தையடி ஊர்மக்கள் இணைந்து நடத்தும் 56 வது பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குடும்பத்துடன் பங்கேற்றார். இந்த விழாவில் பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லாந்து, மலேசியா உட்பட வெளிநாட்டவர்கள் 17 பேர் பங்கேற்று பொங்கலிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளப்படுத்தினார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in