‘கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை' - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கட்டாய மதமாற்றம் என்பது தேசத்தின் பாதுகாப்பைப் பாதிக்கும் மிகத் தீவிரமான பிரச்சினை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும், இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கட்டாய மதமாற்றத்தை இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்கக் கோரி டெல்லி பாஜக தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, “ நடப்பது உண்மையாக கட்டாய மத மாற்றம் என கண்டறியப்பட்டால், அது மிகவும் தீவிரமான பிரச்சினையாகும். இது இறுதியில் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் மனசாட்சி மற்றும் மக்களின் மத சுதந்திரத்தை பாதிக்கலாம். எனவே கட்டாய மதமாற்றத்தை நிறுத்த மத்திய அரசு நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், மிகவும் கடினமான சூழ்நிலை வரும். நீங்கள் என்ன நடவடிக்கையை முன்மொழிகிறீர்கள் என்று எங்களிடம் கூறுங்கள். நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 28-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in