`கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்': சோனியா காந்தியின் தனி செயலாளர் மீது வழக்கு பதிவு

`கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்': சோனியா காந்தியின் தனி செயலாளர் மீது வழக்கு பதிவு

சோனியா காந்தியின் தனி செயலாளராக இருக்கும் மாதவன் என்பவர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் தனி செயலாளராக இருந்து வருபவர் பி.பி. மாதவன். 71 வயதான இவர் மீது பெண் ஒருவர் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் தனது கணவர் மறைவுக்கு பின், வேலை தேடி அலைந்து கொண்டிருந்தேன். அப்போது, மாதவன் என்பவரை தொடர்பு கொண்டேன். அவர் என்னை முதலில் நேர்காணலுக்கு அழைத்தார். மேலும், வீடியோ கால், வாட்ஸ்அப் மூலமும் பேசினார்.

இதனிடையே, உத்தம் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தனியாக என்னை அழைத்து சென்றார். கட்டாயப்படுத்தி என்னை காரில் ஏற்றிய மாதவன், சுந்தர் நகரில் உள்ள குடியிருப்புக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்" என்று கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் பி.பி.மாதவன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு திட்டமிடப்பட்ட சதி என்று மாதவன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in